தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய சமந்தா.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

samantha-211
samantha-211

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா.  இவர் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பு திறமையினாலும்,விடா முயற்சியால் தற்போது தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார்.

முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், விக்ரம்,விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தற்பொழுது இவர் தமிழ்,தெலுங்கு என்று 2 திரையுலகிலும் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவிற்கு இன்று பிறந்த நாள் எனவே சமந்தாவின் ரசிகர்கள் இவருக்கு மகாராணி போல் காமன் டிபி அமைத்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு கத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் சமந்தா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.  அந்த வகையில் தற்போது படப்பிடிப்பில் இருப்பதால் தனது படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.  அவ்வபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.