30 கிலோ எடை சுமந்துகொண்டு நடித்த சமந்தா.. சகுந்தலம் திரைப்படம் குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட்

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை சமந்தா. இவர் சமீபகாலமாக சோலோ படங்களில் நடித்து வெற்றிகளை குவிக்கிறார். இதனால் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில்  அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமந்தா கடைசியாக நடித்த “யசோதா” திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து சகுந்தலம், குஷி மற்றும் ஹிந்தியில் இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த நிலையில் அரியவகை நோய் ஒன்று அவரை தாக்க சிறிது காலம் மருத்துவமனையிலேயே அவர் இருந்தார் ஒரு வழியாக அதிலிருந்து குணமடைந்து உடம்பை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் குணசேகர் இயக்கியுள்ள சகுந்தலம் திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர உள்ளது இந்த படம் முழுக்க முழுக்க வரலாற்று கதைகளத்தில் உருவாகி உள்ளது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.

சகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுடன் கைகோர்த்து தேவ் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார் மற்றும் மதுபாலா, அதிதி பாலன், கௌதமி மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர் அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் சகுந்தலம் திரைப்படத்தில் சமந்தா பட்ட கஷ்டங்கள் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது சகுந்தலம் திரைப்படத்தில் 3 கோடி மதிப்பில் உள்ள நகையுடன் தான் சமந்தா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சுமார் 30 கிலோ எடை கொண்ட ஒரு உடையை அவர் அணிந்து நடித்தாராம்.

அதுவும் கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த காட்சி எடுக்கப்பட்டதாம்.. சகுந்தலம் படத்திற்காக சமந்தா பட்ட கஷ்டங்கள் ரொம்ப பெருசு எனவும், இந்த கடின உழைப்புக்கு நிச்சயம் சகுந்தலம் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று தரும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.