முதன்முதலாக தன்னுடைய பிட்னஸ் ரகசியத்தை உடைத்த சமந்தா..! இது என்ன புது விளம்பரமா இருக்குமோ..!

samantha-12

தமிழ் திரை உலகில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதன் காரணமாக இவருடைய மவுசு குறையாமலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தெலுங்கில் சகுந்தலா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதுமட்டும் இல்லாமல் கதாநாயகியாக நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள் என்னதான் திரைப் படத்தில் பிஸியாக இருந்தாலும் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறந்ததே கிடையாது.

நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யா உடன் மோதல் ஏற்பட்டதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து  செய்து கொள்ளப்போவதாகவும் பல்வேறு வதந்திகள் உருவாகின ஆனால் இது முழுக்க முழுக்க பொய் என கோவாவில் வீடு வாங்கி கணவன் மனைவி ஆகிய இருவரும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்து உள்ளார்கள்.

பொதுவாக நடிகை சமந்தா சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய சிக்ஸ்பேக் தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா நான் ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலமாக தான் ஆரோக்கியமாக இருக்கேன் என புகைப்படத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார் ஆனால் இது விளம்பரத்திற்காக சாப்பிடுவது போல் போஸ் கொடுக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

samantha-11
samantha-11