எப்பொழுதும் நயன்தாரா நயன்தாரா தான் என நயன்தாராவை புகழ்ந்து நயன்தாரா போல் இன்னொருவர் இல்லை என கூறி பிரபல நடிகை சொன்னது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் இரண்டு காதலியிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் ஆணின் நிலைமை இது தான் என மிகவும் அழகாக விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
என்னதான் விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலித்து வந்தாலும் இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் சம அளவு உரிமை கொடுத்து மிகவும் அழகாக காட்சிகளை காட்டியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சமந்தாவின் காட்சிகள் கவிதை போல் மிகவும் அழகாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமீபத்தில் நடிகை சமந்தா நயன்தாரா குறித்து பேசியது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. நயன்தாரா நயன்தாரா தான் அவருக்கு ஈடு இணை யாருமே இல்லை இதுவரை நான் சந்தித்தவர்களில் நயன்தாரா தான் மிகவும் உண்மையானவர் விசுவாசமானவர் கடின உழைப்பாளி என சமந்தா நயன்தாராவை புகழ்ந்துள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் பிரபல இணையதளம் ஒன்று நயன்தாராவை பற்றி ஏதாவது கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்கள் அதற்கு தான் சமந்தா இவ்வாறு கூறியுள்ளார். ஏற்கனவே சமந்தா விக்னேஷ் சிவன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இது மிகப்பெரிய வைரலானது இந்த நிலையில் திடீரென நயன்தாராவை இவ்வாறு புகழ்ந்து உள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒரு சில ரசிகர்கள் நயன்தாராவிடம் உங்களுக்கு சமந்தா ஐஸ் வைக்கிறார் உங்கள் காதலனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.