இரு உலகங்கள் சந்திக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தாவின் குஷி பட போஸ்டர் உடன் வெளியான ரிலீஸ் டேட் இதோ.!

kushi
kushi

நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சமந்தாவின் அடுத்த படமான குஷி படத்தின் ரிலீஸ் தேதியை சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவே ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது இந்நிலையில் திடீரென சமந்தாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இடையில் சில மாதங்கள் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சமந்தாவின் உடல்நிலை சரியாகி உள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் படப்புழு சமீபத்தில் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டு இருக்கும் நிலையில் சமந்தா இந்த போஸ்டர் அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோஹினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்க, ஹேஷம் அப்துல் வகாப் இசையமைப்பில் முரளி ஒலி பதிவில் பிரவீன் புடி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.