தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1, நம்பர் 2 நடிகைகளாக விளங்குபவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா. போட்டி போட்டுக் நடித்துக்கொண்டு வந்த இவர்கள் தற்பொழுது ஹிந்தியில் யார் டாப் என தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து அங்கேயும் போட்டி போட்டு நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார் அதற்கு ஏற்றார் போல நடிகை சமந்தாவும் தற்பொழுது ஹிந்தி பக்கம் படம் பண்ணி வருகிறார். இதுதான் தென்னிந்திய சினிமாவுலகில் வளர வேண்டிய சரியான நேரம் என கருதி பல நடிகைகள் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் நடித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவராக அந்த இடத்தை பிடிக்க தற்பொழுது அடிபோட்டு உள்ளவர் தான் ப்ரியா பவானி சங்கர் இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, இரண்டாவது ஹீரோயின்னாக நடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளார். இருந்தாலும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது ஏழு, எட்டு படங்கள் பண்ணி வருகிறார். அதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகினர்.
இப்படி ஓடிக்கொண்டு இருந் நடிகை ப்ரியா பாவனி சங்கருக்கு அண்மை காலமாக அதிர்ஷ்டம் அடித்து உள்ளது. இப்பொழுது அவர் முக்கிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார். இதனால் அவருடைய வளர்ச்சி அமோகமாக இருப்பதாக சினிமா உலகில் பேசப்படுகிறது சமீபத்தில் கூட ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார்.
இந்த வரிசையில் சிம்புவின் பத்துதல, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இரண்டாவது நாயகி என்கின்ற ரோலில் இருந்து முன்னேறி தற்போது முக்கிய நாயகியாக படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார். இப்படியே போகும் பட்சத்தில் நயன்தாரா, சமந்தாவுக்கு இவர்தான் டஃப் கொடுப்பார் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.