சமந்தாவுக்கும், நாக சைதன்யாவும் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.? மறைமுகமாக சொல்லும் சமந்தா.?

samanatha
samanatha

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களுடன் முதலில் நடித்து பின் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து தனது திறமையை வளர்த்துக் கொண்டார் இப்படி தமிழில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் தெலுங்கில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சூப்பராக வாழ்ந்து வந்த நிலையில் சமந்தா சமீபகாலமாக நடிக்கும் படங்கள் நாக சைதன்யா சில கருத்து வேறுபாடுகளை உண்டாக்கியது அதன் காரணமாக சமந்தாவுக்கும், நாக சைதன்யாவும் அதிக பேச்சு வார்த்தைகளில் இல்லை என ஒருபக்கம் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமந்தாவை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியாத மாதிரி தான் இருக்கிறது காரணம் சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடிப்பதோடு அவருடைய அளவை குறைத்துக் கொண்டு போட்டோசூட்டிலும் பின்னி பெடல் எடுக்கிறார்.

தற்போது தமிழில் நயன்தாரா காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்த நிலையில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி தெலுங்கில் டாப் நடிகரான நாகார்ஜுனா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அதை கண்ட  சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார் அப்போது அவர் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். திடீரென அந்த பதிவை நீக்கி விட்டு மிகவும் அழகாக இருக்கிறது மாமா என குறிப்பிட்டு சமந்தா மீண்டும் அந்த வீடியோவை ஷேர் செய்து இருந்தார்.

சமிப காலமாக சமந்தாவுக்கும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்ற தகவல்  அடிக்கடி வருகின்ற வேளையில் என் சமந்தா நாகார்ஜுனாவை மாமா என்று உரிமையுடன் கூப்பிடமுடியும் என்று கேட்டுகின்றனர்.