தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வெகுவிரைவிலேயே பெற்றவர் சமந்தா. மேலும் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து வந்தால் வெகு விரைவிலேயே நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு செல்வார் சமந்தா இப்படி சினிமாவில் வெற்றி கொடியை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் தான் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளார்.
சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடம் கல்யாண வாழ்கை ஒருவழியாக விவாகரத்து பெற்று முடிவுக்கு வந்துள்ளது.சமந்தாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பெற்றதற்கு முக்கியக் காரணம் ஹிந்தியில் டாப் நடிகர் ஒருவர் தான் காரணம் என மறைமுகமாக சாடியுள்ளார் பிரபல நடிகை கங்கனா ரனாவத்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்னிந்திய நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் அவருக்கு சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பழக்கம் நாளடைவில் செல்ல செல்ல தான் பல விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு அவர் சமந்தாவை விவாகரத்து செய்ததாக கூறினார். மேலும் இந்தியில் டாக் நடிகராக இருக்கும் அவர் பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து உள்ளார்.
நான் யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் மேலும் எப்பொழுது விவாரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல் தான் உள்ளது நான் சொல்வது பழைய தனமாக தெரியலாம் ஆனால் கடவுள் இப்படித்தான் ஆணையும் பெண்ணையும் அவரவர்களின் இயல்புகளாக படைத்துள்ளார். இயற்கையாகவே ஆண்கள் வேட்டையாடுவார்காவும், பெண்கள் வளர்ப்பவராகவும் இருக்கிறார்கள் மேலும் பெண்களை அட்டைபோல் எளிதில் மாற்றி பின் அவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு ஆண்கள் பேசுவதை கட்டாயம் நிறுத்த வேண்டும் 100 பெண்களில் ஒருவர் தவறாக இருக்கலாம் ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஊடகம் மற்றும் ரசிகர்களும் இருந்து ஊக்கம் பெறும் இவர்கள் வெட்கத் தலைகுனிய வேண்டும். விவாகரத்து கலாச்சாரம் முன்பை விட இப்பொழுது தான் அதிகம் வளர்ந்து உள்ளது எனவும் கூறினார். நாக சைத்தான்யாவும், அமீர்கானும் இணைந்து தற்போது லால் சிங்சதா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இவர்கள் இருவரும் இணைந்த பிறகு தான் சமந்தா வாழ்க்கையை முடிவுக்கு வந்ததாகவும் அவர் மறைமுகமாக சாடினார். சமீபத்தில்கூட நாக சைதன்யா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்தார்.