நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது அது மட்டும் இல்லாமல் பல ஆண்டுகாலமாக ஹோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார் இந்த நிலையில் சமீபகாலமாக பாலிவுட்டிலும் கால் தடம் பதித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா நயன்தாராவை போல் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தது படங்களிலும் தொடர்ச்சியாக நடித்த வந்தார் ஆனால் சிறிது காலங்களிலேயே இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது அதன் அடிப்படையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அதிகாரபூர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.
அதனால் சமூக வலைதளத்தில் பல சர்ச்சையான கேள்விகள் எழும்பியது தற்பொழுது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவரவர்கள் தனித்தனியாக படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார் சமந்தா பிரிவிற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா என்ற திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு படுங் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் சமந்தா நடித்திருந்தார் மேலும் சமந்தா சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிற இதன் போஸ்டர் வெளியானது இந்த திரைப்படத்தை குணசேகர் என்பவர் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையி சமூக வலைதளத்தில் சமந்தா பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் சென்னையில் பிரபல பள்ளியில் தான் சமந்தா படித்துள்ளார் அதற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தற்போது இணையதளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் சமந்தா நடிப்பில் தான் சிறப்பாக நடிப்பார் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் பலரும்.
ஆனால் படிப்பில் அதைவிட சிறப்பாக படித்துள்ளார் என்பதை இந்த மார்க் ஷீட்டை பார்த்தாலே அனைவருக்கும் தெரியும் அது மட்டும் இல்லாமல் இந்த மார்க்கெட்டில் சமந்தா பள்ளிக்கு கிடைத்த சொத்து என எழுதப்பட்டுள்ளது.