நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய், தனுஷ் உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். தற்பொழுது இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
பொதுவாக தற்பொழுது உள்ள பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சமந்தா அப்படியெல்லாம் இல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களிலும் சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை சமந்தா தெலுங்கு முன்னணி நடிகரான நாக சைதன்யாவை 2017ஆம் ஆண்டு காதலித்து தங்களது பெற்றோர் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இவர்களின் சொத்து மதிப்பை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 84 கோடியும் இவரின் கணவரான நாக சைன்யாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 38 கோடியும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இவர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 112 கோடியாம்.