Vichithra : பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதிலும் சமீபத்தில் கேப்டன் விஜய்யை கவராத ஆறு போட்டியாளர்களை இன்னொரு வீட்டிற்கு பிக் பாஸ் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரமோ வீடியோ வெளியாகியது அந்த ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் போட்டி நடைபெற்றது அந்த போட்டி தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதில் விசித்திர ஒரு மட்டமான காரணத்தை சொல்லி நாமினேட் செய்துள்ளார் இதுதான் ஹைலைட்டாக இன்று சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விசித்ரா ஐஸுவை அவர் உடை அணியும் விதம், உட்காரும் விதம் மேக்கப் என அனைத்து விஷயங்களும் சரி இல்லை எங்க சின்ன வயசு பசங்களும் இருக்காங்க பெரியவங்களும் இருக்காங்க எப்படி கவனமா நடந்துக்கணும்னு அவங்களுக்கு தெரியல எனக்கூறி ஐசுவை நாமினேட் செய்தார்.
இவர் கூறியதை கேட்ட நெட்டிசன்கள் நீங்க ரொம்ப ஒழுங்கா படத்தில் நடிச்சிட்டீங்க அப்படி இப்படி காட்டி தானே படமே நடிக்கிறீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள். நாம இப்ப எந்த இடத்துல இருக்குன்னு கூட தெரியாம இவ்வளவு கீழ்த்தரமா பேசுறீங்களே என கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் முன்னால் பிக் பாஸ் போட்டியாளர் சனம் செட்டி விசித்திராவின் செயலுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் வீட்டுக்கே சென்று விடுங்கள் இப்படி சொல்லுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என தன்னுடைய கண்டனத்தை twitter மூலம் தெரிவித்துள்ளார். விசித்ரா தற்பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.
Hello madam neenga kannu moodikitu unga veetuke podunga!
What nonsense is this?
Stop promoting the very suppression women are trying to overcome!
Can't believe she has a psychology degree!#vichitra#womenshaming #parvaithappu #biggbosstamil7 #BBTamilSeason7 @LittletalksYt… pic.twitter.com/XUHrdjNV3P— Sanam Shetty (@ungalsanam) October 2, 2023