இளையதளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எங்கு நடத்தலாம் என பட குழுவினர்கள் யோசித்து வருகிறார்கள்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாக அப்போது ஒரு தகவல் சமூக வலைதளபக்கங்களில் வைரலானது.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பை விட விஜய் சேதுபதி நடிப்புதான் அட்டகாசமாக இருந்தது என ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில் படம் பார்க்கும் பொழுது விஜய்சேதுபதி நடிப்பு மிகவும் மிரட்டலாக இருந்தது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
மேலும் இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் வெளியான பொழுது நன்றாக வசூல் செய்தது அந்த வகையில் பார்த்தால் இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளில் வெளியான பொழுது இந்த திரைப்படம் முதல் நான்கு நாட்களில் 23 கோடி வசூல் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெளியான எந்த திரைப்படமும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லையே என தவித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் மே 13ஆம் தேதி பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ராதே திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க முடியவில்லையாம்.
ஆம் மாஸ்டர் திரைப்படம் முதல் நான்கு நாட்களில் 23 கோடி வசூல் செய்தது ஆனால் இந்த திரைப்படம் நேரடியாக இந்தியாவில் OTT தளத்தில் வெளியானாலும் இந்த திரைப்படம் மூன்று நாட்களில் தற்போது வரை 13 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம் மேலும் இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் பலரும் விஜய் மாஸ்டர் படத்தை மிஞ்சி விட முடியுமா என சவால் விட்டு வருகிறார்கள்.