சிறப்பான கதைகள் ஒரு நடிகரை வேற லெவலுக்கு உயர்த்திவிடும் அதை நாம் தற்போது பார்த்தும் வருகிறோம் அந்த வகையில் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் ஆகிய படத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் பிரபாஸ். படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவது மட்டுமல்லாமல் நடிகர் பரபாஸை வேற ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற படங்களாக அமைந்து உள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் சினிமா பயணம் உச்சத்தை தொட்டது மேலும் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார் பாகுபலி சீரிஸ் தொடர்ந்து பிரபாஸ் சாஹோ திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படமும் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படமாக அமைந்தது.
அதன்பின் இவர் ஆதிபுருஷ், சலார், ராதேஷியாம் என தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரபாஸிற்கு சம்பளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது ஆம் இப்போது கூட நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக சுமார் 150 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்பிரிட் திரைப்படத்திற்காகவும் நடிகர் பிரபாஸ் 150 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது இச்செய்தியை தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பெருமையுடன் கூறி வருகிறது காரணம் ஹிந்தியில் இருக்கின்ற டாப் நட்சத்திரங்கள் கூட இவ்வளவு சம்பளம் பலம் வாங்கியதே கிடையாது என்பதை வெளிக்காட்டி தற்பொழுது சந்தோஷப்பட்டு வருகிறது.
ஹிந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் சல்மான்கான், அக்ஷய்குமாரை விட இவர் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற்றால் இன்னும் அவரது வளர்ச்சி அமோகமாக இருக்கும் என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது இது தற்போது மற்ற நடிகர்களை ஒரு பக்கம் ஆதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.