நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் கிசுகி பாய், கிசுகி ஜான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது.
அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் வீரம். இந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்த நிலையில் மேலும் இவர்களை தொடர்ந்து பாலா விதார்த், சந்தானம், அப்புகுட்டி, அபிநயா, வித்யுலேகா, ராமன் நாசர், மயில்சாமி, தம்பி ராமையா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது இருந்தார்கள்.
ஆக்சன், காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து உருவாகி இருந்த இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றது. இவ்வாறு தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற இந்த படம் தெலுங்கில் வீருடோக்கடே என்ற பெயரிலும், ஹிந்தியில் வீரம் தி பெர்மன் என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
மேலும் அதேபோல் தெலுங்கிலும் கடந்த 2017ஆம் ஆண்டு கட்டமாராயுடு என பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருந்த நிலையில் சுருதிஹாசன், கல்யாண், பவித்ரா, லோகேஷ், நாசர் என பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்பொழுது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில் ஹீரோவாக சல்மான் கான் நடித்து வருகிறார்.
இந்த படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு கிஸி கி பாய், கிஸி கி ஜான் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்திலும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இவ்வாறு தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியான நிலையில் வீரம் படத்தின் கதையினை மையமாக வைத்து சில காட்சிகளை மட்டுமே மாற்றி டைட்டிலை கிஸி கி பாய், கிஸி கி ஜான் என பெயர் வைத்துள்ளார்கள் எனவே இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் கடுப்பில் இந்த படத்தினை விமர்சனம் செய்து வருகின்றனர்.