தாலி கட்டுற நேரம் தம்பி எங்கே.! தாலி கழுத்தில் ஏறியதும் வெடித்த சம்பவம்

news
news

திரைப்படங்களில் ஒரு சில சம்பவங்களைப் பார்த்தால் நம்முடைய எதிரிகளுக்கு கூட இது நடக்கக் கூடாது என மனதிற்குள் தோன்றும் அந்த வகையில் நெஞ்சை உறைய வைக்கும் சோகம் ஒன்று நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில் பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் இவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார் இவரின் சகோதரிக்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது அதனால் அந்த திருமணத்தை முன்னின்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வந்துள்ளார் ஜெகதீசன்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் சகோதரியின் திருமண ஏற்பாடுகளை பார்த்து வந்த ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் கார்த்திகேயன் ஆகிய மூவரும் மண்டபத்தில் கல்யாண வேலைகளை கவனிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தொட்டில் பட்டியிலிருந்து திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார்கள்.

அப்பொழுது நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூழலில் எதிரே வந்த ஓசூருக்கு சென்ற பேருந்து மீது மூன்று இளைஞர்களும் இருசக்கர வாகனத்திலிருந்து திரும்பும்பொழுது எதிர்பாராத விதமாக பேருந்தும் இருசக்கர வாகனம் மோதி கொண்டது.

அப்பொழுது மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டார், சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்களும் பரிதாபமாக இறந்துவிட்டார்கள். இந்த விபத்திற்கு காரணம் மூன்று இளைஞர்களும் மிகவும் வேகமா வந்ததுதான் என அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதில் ஜெகதீஷ் கூலி வேலை பார்க்கிறார் கார்த்திகேயன் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார் அஜித்குமார் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். ஜெகதீசன் இறந்ததை பெற்றோர்களுக்கும் சகோதரிக்கும் அவரது உறவினர்கள் தெரிவிக்கவில்லை தாலி கட்டும் நேரத்தில் தம்பியை காணவில்லை என சகோதரி கேட்டுள்ளார் அதன்பிறகுதான் பெற்றோர்களும் தேட ஆரம்பித்தார்கள்.

பின்பு தாலி கழுத்தில் ஏறியவுடன் உறவினர்கள் அனைவரும் ஜெகதீசன் இறந்த செய்தியை கூறியுள்ளார்கள் அதன் பிறகு சந்தோஷமாக இருந்த திருமணமே சோகத்தில் மூழ்கியது, தாலி ஏறியவுடன் புதுமண தம்பதிகள் பெற்றோர்கள் என அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தார்கள்

இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.