சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் அரண்மனை தற்போது இந்த படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார் இந்த திரைப்படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அரண்மனை படத்தின் நான்காவது பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. அரண்மனை படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருந்தார் மேலும் வினய் முதல் பாகத்தில் ஹீரோவாகவும், இரண்டாவது பாகத்தில் சித்தார்த்த ஹீரோவாகவும் நடித்திருந்தார்கள். இரண்டாம் பாகத்தில் சித்தார்த்தத்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் சமுத்திரகனி பாணியில் பேய் ஓட்டுவதற்கான வேலைகள் நடைபெற்றது.
இவர்களை அடுத்து திருடனாக அரண்மனை படத்தில் நடித்து காமெடி காட்சிகளின் மூலம் கலக்கியவர் தான் சந்தானம். அரண்மனை மூன்றாவது பாகத்தில் யோகி பாபு காமெடிகள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை எனவே நான்காவது பாகத்தில் மீண்டும் சமந்தா காமெடியனாக களமிறங்க போவதாக கூறப்படுகிறது.
இவரை எடுத்து விஜய் சேதுபதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் இவர் இதற்கு முன்பே பீட்சா, அனபெல் சேதுபதி, பிசாசு 2 உள்ளிட்ட போய் திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாக இருக்கும் அரண்மனை படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி 40 நாட்கள் கால் சீட் ஒதுக்கி உள்ளார். பிறகு இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இவ்வாறு 40 நாட்கள் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி பாலிவுட் படங்களில் நடிக்க 35 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில் தமிழ் படங்களில் நடிப்பதற்காக குறைவான சம்பளங்களை பெற்று வருகிறார். இவரை அடுத்து சில காலங்களாக ஹீரோவாக நடித்த சந்தானம் தற்பொழுது காமெடியனாக நடிக்கவுள்ளார். அவருக்கு 7 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சந்தானம் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.