‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

captain miller
captain miller

Actor Dhanush: நடிகர் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான தனுஷ் தற்பொழுது பான்-இந்திய நடிகராக கலக்கி வருகிறார். இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவதால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.

அப்படி தொடர்ந்து அடுத்தடுத்த  படங்களில் நடித்து வரும் தனுஷ் தமிழ், பாலிவுட் என ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் 1930-40களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி என பான்+இந்திய படமாக உருவாகி வரும் நிலையில் சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பயங்கர சண்டை காட்சிகளில் தனுஷ் நடித்து மிரட்டி இருந்தார்.

இவ்வாறு நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தினை தொடர்ந்து இவரது 49வது படத்தினை நெல்சன் இயக்க இருக்கிறார் எனவும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

தனுஷின் 50வது படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு ரியல் பான்-இந்தியா ஹீரோவாக தனுஷ் சினிமாவில் கலக்கி வருகிறார்.