வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் கூட வசூல் ரீதியாக கோடிகளை குவித்து வரும் நிலையில் வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 14 கோடியும், உலகம் முழுவதும் ரூபாய் 23 கோடியும் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
இவ்வாறு இன்னும் இந்த படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 50 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முதல் பாகத்தினை தொடர்ந்து இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க பட குழுவினர்கள் முடிவெடுத்து உள்ளார்களாம்.
அந்த வகையில் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விடுதலை திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக தன்னுடைய கடின உழைப்பை கொடுத்துள்ளார்.
அதாவது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த படத்தில் தன்னுடைய சிறந்த கடின உழைப்பை செலுத்தியுள்ளார். எனவே இதன் காரணமாக காமெடி நடிகராக இருந்து லட்சகணக்கில் சம்பளம் வாங்கிய சூரி இந்த படத்தை சம்பளத்திற்காக மட்டுமல்லாமல் தனக்கு ஒரு ஹீரோ அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக நடித்திருக்கிறார்.
அந்த வகையில் விடுதலை திரைப்படத்திற்காக நடிகர் சூரி வெறும் 30 லட்சம் சம்பளம் வாங்கிய இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில் அது முழுக்க முழுக்க வதந்தி என தெரியவந்துள்ளது. அந்த வகையில் விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் சூரிக்கு கணிசமான சம்பளம் தான் கொடுக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர்கள் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.