சம்பளம் லட்சத்தில் வேண்டாம் பிரியா பவானி சங்கர் அதிரடி.! தயாரிப்பாளர்கள் அலறல்…

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் நடித்து பிரபலமானார். இந்த சீரியலும் நல்ல வரவேற்பு பெற்றதால் நடிகை பிரியா பவானிசாகர் வெள்ளித் திரையில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மன பெண்ணே, பிளட் மணி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அது மட்டுமல்லாமல் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் நடித்து முடித்து விட்டு நடிகை பிரியா பவானி சங்கர் தன் காதலனுடன் வெளிநாட்டில் இரு மாதங்களாக தங்கி நாட்களை கழித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து 10 முதல் 20 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்று வரும் நடிகை பிரியா பவானி சங்கர் துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாக உள்ள அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2, போன்ற படங்கள் இவருக்கு கை கொடுக்குமா என்று தெரியாமல் இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சினிமாவில் மார்க்கெட் உயரவேண்டும் என்பதற்காக சம்பளத்தை உயர்த்தி கேட்டாலும் அதை தயாரிப்பாளர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்தால் லீட் ரோலில் மட்டும்தான் நடிப்பேன் என்று காரராக கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போதுதான் மார்க்கெட் கொஞ்சம் ஸ்ட்ராங்காக அமையும் என முடிவெடுத்திருக்கிறாராம்.