தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு இது முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி உள்ளது இதில் மிகப்பெரிய ஒரு பணக்காரராக விஜய் நடித்திருக்கிறார். அவருடன் கைகோர்த்து இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, ஜெயசுதா..
என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறாராம். படம் வெளிவருவதற்கு முன்பாகவே வாரிசு பட குழு பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது இந்த நிலையில் படம் வருகின்ற 11ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பல முக்கிய இடங்களில் ரிலீஸ் ஆகிறது
தெலுங்கில் மட்டும் 14 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் வாரிசு படக்குழு படத்தின் கதை மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறதால் எந்த தேதியில் வெளிவந்தாலும் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் இருக்கிறதாம்.
இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது அதன்படி பார்க்கையில் தளபதி விஜய் மட்டும் 110 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா 4 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது.
சரத்குமாருக்கு இரண்டு கோடியும் பிரகாஷ்ராஜுக்கு 1.5 கோடியும் நடிகர் ஷாமுக்கு ஒரு கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்களைத் தொடர்ந்து யோகி பாபு 35 லட்சம் குஷ்பூ 40 லட்சம் ஜெயசுதா 30 லட்சம் வாங்கி உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.