பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் கை கொடுக்கவில்லை இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் தான் சலார். இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததா என்பதை இங்கே காணலாம்.
வெளிநாட்டில் இருந்து தன்னுடைய தந்தைக்கு தெரியாமல் இந்தியா வருகிறார் ஆத்யா என்கின்ற சுருதிஹாசன். ஆனால் இந்தியாவுக்குள் வந்தால் அவரை வெட்டுவதற்கு ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியாமல். உடனே ஈர கொலை நடுங்க இந்தியாவிற்கு தனியாக வந்திருக்கும்தன்னுடைய மகளை எப்படியாவது காப்பாத்த வேண்டும் என தன்னுடைய கூட்டாளி பிலாலிடம் கூற உடனே பிலால் தன்னுடைய நண்பன் தேவாவிடம் விஷயத்தை சொல்லி காப்பாற்ற உதவி கேட்கிறார்.
2023 – ல் சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்திய 5 நடிகர்கள்..! விஜய்யை முந்திய வாரிசு நடிகர்
தேவா அசாமில் தன்னுடைய தாயுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். அதேபோல் தன்னைச் சுற்றி எந்த பிரச்சனை நடந்தாலும் அதனை கடந்து செல்வேன் என தன்னுடைய தாயிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் ஆத்யாவை காப்பாற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக வைக்கிறார். மற்றொரு பக்கம் ஆத்யா எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு எதிரிகள் அவரைத் தேடி தேவாவின் இடத்திற்கே செல்கிறார்கள்.
ஆனால் தேவா என்கின்ற பிரபாஸ் தாக்க வந்த அனைத்து ரவுடிகளையும் விரட்டி அடிக்கிறார் ஒரு கட்டத்தில் ஆத்தியாவை கடத்தியது கான்சார் மன்னன் வரத்தா மன்னர் பிரித்திவிராஜ் ஆட்கள் என தெரிய வருகிறது ஆனாலும் தேவா அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் எதிரிகளை கொடூரமாக அடித்து துவைக்கிறார். யார் இந்த தேவா என ஒரு கதாபாத்திரம் கேட்கும் பொழுது கான்சார் முத்திரையை உருவாக்கியவன் என படத்தின் கதை ஆரம்பிக்கிறது.
டைரக்டர் எடுத்த முடிவால்.. ரவி கிருஷ்ணாவுக்கு விழுந்த செருப்படி.. அந்த நடிகைக்கு தில்லு ஜாஸ்தி தான்
வரதராஜனுக்கும் தேவாவுக்கும் இடையே என்ன நடந்தது என்பதை கதையாக முதல் பாகம் உருவாகியுள்ளது பிரம்மாண்ட பொருட்செலவு ஆயிரத்துக்கும் அதிகமான நடிகர்கள் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு எவ்வளவு மெனக்கட முடியுமோ அந்த அளவு உழைப்பை கொட்டி தீர்த்து உள்ளார்கள். தன் படங்களுக்கென பாகங்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்திய இயக்குனர்களிடமிருந்து விலகி ஒரு புனைவு நிலத்தையே கதைக்குள் கொண்டு வந்து சலார் படத்திலும் தன் கதையை ரசிக்க வைத்துள்ளார்.
அதிலும் இடைவெளிக்கு முந்தைய சண்டை காட்சி ஆச்சரியப்படுத்தியது அதேபோல் கே ஜி எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் சலார் திரைப்படத்திலும் லாஜிக்கை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தன் கதைக்கான உலகத்தை உருவாக்கி அதில் சண்டையை மட்டும் நிரப்பி படத்தை எடுத்துள்ளார். தன் நண்பனுக்கு என்ன நடந்தாலும் யாரையும் சும்மா விடாத ஒருவன் அதே நண்பனுக்கு எதிரியாக மாறினால் எப்படி இருக்கும் என்கின்ற பழைய கால கதையை எடுத்துக்கொண்டு இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நம்பி சலார் திரைப்படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த்.
Vidaamuyarchi : காதும், காதும் வச்ச மாதிரி வேலையை முடித்த அனிருத்.. வெளிவந்த சூப்பர் அப்டேட்!
கே ஜி எஃப் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மிகப்பெரிய வசனங்கள் சலார் திரைப்படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை சில இடங்களில் இன்னுமா இந்த அண்ணாமலை கால வசனத்தை பேசுவது என சிரிப்பு வருகிறது. கே ஜி எஃப் என்கின்ற இடத்தை உருவாக்கியது போல் இந்த திரைப்படத்தில் கான்சர் என்ற இடத்தை உருவாக்கி அதை யார் ஆட்சி செய்யப் போகிறார் என்பதைப் போல் படத்தை நகர்த்தி உள்ளார்கள்.
படத்திற்கு மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால் கேஜிஎப் திரைப்படத்தை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்ததுதான் சலார் நாயகனை யாருமே நெருங்க முடியாத அளவிற்கு ஓவர் பில்டப் கொடுத்து சொதப்பியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தால் தான் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கே ஜி எஃப் திரைப்படத்தில் துப்பாக்கி சண்டைக் காட்சியில் கொஞ்சமாவது லாஜிக் இருந்தது ஆனால் சலார் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வாலுடன் சென்று பிரபாஸ் அனைவரையும் வெட்டி வீழ்த்துவார் ஆனால் பிரபாஸ் மீது ஒரு அடி கூட விழாது.
என்ன ஹன்சிகா மேடம், புருஷன் சோறு போடலையா அநியாயத்துக்கு ஒல்லியா ஆகிட்டீங்க..! வைரலாகும் புகைப்படம்..
அதேபோல் பிரபாஸ் அறிமுக சண்டைக் காட்சியில் பலரை கொடூரமாக அடிப்பார் அப்பொழுது சிறுவர்கள் கைதட்டி ரசிப்பார்கள் இந்த காட்சியை இயக்குனர் எதற்காக வைத்துள்ளார் வன்முறை காட்சிகளை பார்த்து குழந்தைகள் கெட்டுவிடக் கூடாது என்பதை எப்படி இயக்குனர் மறந்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
என்னதான் படத்தின் கதை இருந்தாலும் படத்திற்கு மிகப்பெரிய பலமே ரவி பசூரின் பின்னணி இசை தான் சண்டைக் காட்சி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அதன் தாக்கம் குறையவே கூடாது என்பதற்காக திரையரங்கை அதிர வைத்துள்ளார் அதேபோல் ஒரு சில இடங்களில் பின்னணி இசை மிகப்பெரிய தொந்தரவாகவும் இருக்கிறது.
உன் சித்து விளையாட்டெல்லாம் கமலோட வச்சுக்கோ.. மாயாவுக்கு குட்டு வைத்த விக்ரம் தந்தை
இப்படி சலார் திரைப்படம் ஒரு சில ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் ஒரு சில ரசிகர்களுக்கு பெரிதாக படம் எதிர்பார்ப்பை தூண்டவில்லை இருந்தாலும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு வரப் பிரசாதம் தான் அதே வன்முறை ரத்தம் அசைக்க முடியாத நாயகன் என சலார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.