Actor Prithviraj: மலையாள நடிகர் பிரித்விராஜின் பிறந்த நாளை முன்னிட்டு சலார் படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த பிரசாந்த் நில் தற்பொழுது சலார் படத்தினை இயக்கி வருகிறார் இந்த படம் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது.
மேலும் பிரபாஸ், சுருதிஹாசன் பிரித்வி ராஜ், ஜெகபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்திய படமாக உருவாகி வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே இதற்கிடையில் கிளைமாக்ஸ் காட்சிகளை சிறப்பாக எடுப்பதற்காக பிரசாந்த் நில் திட்டமிட்டு இருக்கிறாராம் எனவே இதற்காக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் இருக்க பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் படம் தோல்வியினை சந்தித்து வருகிறது. அப்படி பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் எதிர்பார்த்து அளவிருக்கு வெற்றி பெறவில்லை இதனை அடுத்து ஆதிபுருஷ் படமும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
சலார் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக பிரபாஸ் ஆவலுடன் காத்து வரும் நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் 129 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் மலையாள முன்னணி நடிகர் பிரித்வி ராஜ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சலார் படக் குழு பிரித்வி ராஜின் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நெற்றியில் குங்குமம், மூக்குத்தி என வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். சலார் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் வரதராஜா மன்னர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இந்த போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் பிரித்வி ராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.