Salaar Movie : படத்துல ஒன்னும் இல்ல.. வெத்து பில்டப்.. சலார் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்

Salaar
Salaar

Salaar Movie : பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நில் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. பிரசாந்த் நீல் கடைசியாக எடுத்த கே ஜி எஃப் கே, ஜி எஃப் 2 படங்கள் பிளாக் பஸ்டார் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது படம் வெளிவந்து தெலுங்கு, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தமிழில் அந்த அளவிற்கு இல்லை.

படத்தில் சண்டை காட்சிகள் ரொம்ப ஓவராக இருக்கிறது. கிளைமேக்ஸ் கட்சியில் ஜாம்பி சண்டைகள் தேவையில்லை மேலும் கதை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கூறி கலவையான விமர்சனத்தையே இந்த படத்திற்கு வைத்து வருகின்றனர்.

இமான் – சிவகார்த்திகேயன் பிரச்சனை.. ஆதாரத்தை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்

சலார் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரிதிவிராஜ், ஈஸ்வரி ராவ், மீனாட்சி சவுத்ரி, சரவணன் சக்தி, ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர். படம் முதல் நாளில் மட்டுமே 175 கோடி அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ப்ளூ சட்டை மாறன் சலார் படத்தை விமர்சித்துள்ளார்.

KGF படம் போன்று எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் என்பது படத்தைப் பார்வையில் தெரிகிறது ஆனால் அந்த படத்துக்கு ஈடுகட்ட எல்லாம் இந்த வைக்க முடியாது படத்தின் முதல் பாதி முழுவதும் ஹீரோ பற்றி பில்டப் இருக்கிறது ஆனால் அது வெத்து பில்டப்.

விருது விழாவில் “வட சென்னை 2” அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

படம் கன்றாவியாக இருக்கிறது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்டவருக்கு எல்லாம் படத்தில் ஒன்றும் இல்லை நடிக்கவும் இல்லை நடிக்க தெரிந்த ஒரே ஆள் பிரித்விராஜ் படத்தில் வேலை இல்லை எதிரிகள் எல்லாம் மிலிட்டரி டேங்க், மிஷன் கன் ஆகியவை வைத்து சண்டை போடுகிறார்கள் ஆனால் ஹீரோ கோடரி வைத்து சண்டை போடுகிறார்.

கேஜிஎப் படத்தில் பில்டப் இருந்தாலும் அதில் வரும் சீன் எல்லாம் அருமையாக இருந்தன ஆனால் இதில் அப்படி ஒன்றும் கூட இல்லை படத்தை இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள் இந்த படத்தை பார்த்தால் வாழ்க்கையில் மூணு மணி நேரம் வீண் தான் எனக் கூறியிருந்தார்.