இயக்குனர் வாசு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் பன்னீர் புஷ்பங்கள், சின்னதம்பி, கிழக்குக்கரை, பாண்டித்துரை மன்னன், உழைப்பாளி, காதல் கிசுகிசு, சந்திரமுகி, பரமசிவன், தொட்டால் பூ மலரும் என பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தான் இயக்கிய திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது தமிழக அரசின் கலைமாமணி விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார் வாசுவின் மகன் தான் சக்தி இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இயக்குனர் வாசு தெலுங்கிலும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். வாசுவின் மகன் ஷக்தி 2007ஆம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆட்டநாயகன் நினைத்தாலே இனிக்கும் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்கள் அந்தஸ்தை பெற முடியவில்லை. அதேபோல் இவரின் திரைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை இந்த நிலையில் தற்போது சக்தி பிசினஸ் மற்றும் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என எண்ணி கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர் பின்னர் நடன இயக்குனரும் நெருங்கிய தோழியான காயத்ரி ரகுராம் அவர்களுடன் பேசிக்கொண்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயேவெளியேற்றப்பட்டார் அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக சில நாட்களுக்குப் பிறகு உள்ளே நுழைந்தார்.
சக்தி பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அண்ணாநகர் பட்டப்பகலில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பொழுது நிதானம் இல்லாமல் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றான் ஆனால் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சக்தி அவர்களுக்கு அழகான குடும்பம் இருக்கிறது இவர் பி காம் படித்த ஸ்மிருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் இல் படித்தவர்.
இந்த தம்பதிகளுக்கு அழகான பையன் ஒருவன் இருக்கிறான் அவன் பெயர் ஹர்ஷாத். இந்த நிலையில் சக்திக்கு இவ்வளவு அழகான மனைவி இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.