சினிமாவுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக மக்களின் மனதில் இடம் பிடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். “ராஜா ராணி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.
பின் ரஜினி, அஜித் ஆகியோர் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்தவகையில் சாக்ஷி அகர்வால். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “பஹீரா” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மொத்தம் 7 ஹீரோயின். அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அப்பொழுது பல பிரபலங்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர் அவர்களில் ஒருவராக சாக்ஷி அகர்வால்லும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் படத்தின் இயக்குனர் ஆதிக் என்னிடம் கதை சொல்லும்போது இந்தப் படத்தில் மொத்தம் 7 கதாநாயகிகள் என்று சொன்னார். நான் எப்படி இந்த படத்தை இயக்குவார் என்று பயந்தேன் ஆனால் சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது நிச்சயம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும் என கூறினார்.
மேலும் இந்த படத்தின் நாயகன் பிரபுதேவா சாருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகை நான் உங்கள் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. இரண்டு வருடங்களுக்கு மேலாக கடினமாக உழைத்து படக்குழுவினர் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.