தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால், இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கன்னட திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு யோகம் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமடைந்தார் பின்பு இவர் நடித்த திருட்டு விசிடி, க க க போ ஆகிய திரைப்படங்கள் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.
பின்பு ரஜினியின் காலா திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார் அதன் பின்பு விஸ்வாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றார், இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும்பாலான ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர்.
ஆனால் வனிதாவின் அட்ராசிட்டிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார், அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளேபாய் கவிநை அதிகம் கவர்ந்த போட்டியாளர் என்றால் சாக்ஷி அகர்வால் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது ஆர்யா சாயிஷா நடித்துவரும் டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார் இந்த நிலையில் தனது சிவப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக தான் இப்படி அசரவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#SakshiAgarwal pic.twitter.com/nfI3s8JBZA
— Tamil360Newz (@tamil360newz) March 24, 2020