அரண்மனை மூன்றாம் பாகத்தில் தனது பணியை முழுமையாக முடித்துள்ள சாக்ஷி அகர்வால்.! புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட தகவல் இதோ.!

shakshi agarwal

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தான் அரண்மனை முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இந்த இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து கல்லா கட்டியது.

இந்நிலையில் சுந்தர்.சி தற்பொழுது அரண்மனை மூன்றாம் பாகத்தை இயக்கி வந்தார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு பாதிலேயே நின்றுவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா ஆகியோர் நடிக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஆண்ட்ரியா,சாக்ஷி அகர்வால்,யோகி பாபு,விவேக் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைக்கிறார் மேலும் இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது அதற்காக சாக்ஷி அகர்வால் தனது டப்பிங் பணியை முழுமையாக முடித்து விட்டதாக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

இவர் பகிர்ந்த பதிவானது தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

shakshi agarwal
shakshi agarwal