நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் இந்திய மாடல் அழகி ஆவார், தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார், இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர்.
இதனை தொடர்ந்து கனடா மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் 2015ம் ஆண்டு யோகன், திருட்டு விசிடி, அதியன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இதனைத்தொடர்ந்து ரஜினியின் காலா திரைப்படத்திலும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
பின்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவரால் வெற்றிபெற முடியவில்லை ஆனால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார், இந்தநிலையில் தற்போது இவர் சின்டர்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் டெடி திரைப்படத்தில் ஆர்யா சாயிஷா நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியாவது முன்னணி நடிகையின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக சமூகவலைதளத்தில் பட வாய்ப்புக்காக போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது கொரோனா காரணமாக 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள், இந்தநிலையில் வீட்டிலேயே ஜிம் ஒர்கவுட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாம்ல என மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.
#SakshiAgarwal pic.twitter.com/WFpl6ygaU7
— Tamil360Newz (@tamil360newz) April 19, 2020