தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாயிஷா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக்குடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அந்தவகையில் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படம் நடிக்கும்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.
சாயிஷா திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து சமீபத்தில் டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்சா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் சாயிஷா மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க முன்பைவிட சாயிஷா கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது டைட்டான ஜிம் உடையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.