பள்ளி பருவத்தில் தனது தோழிகளுடன் செம்ம ஜாலியாக இருந்த சாய்பல்லவி – யாரும் பார்த்திடாத புகைப்படம்.!

saipallavi-
saipallavi-

மலையாளதில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் சாய்பல்லவி. இவர் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

பின்பு இயக்குனர்களும் தயாரிப்பாளரும் சாய்பல்லவியை அவர்களது படத்தில் கமிட் செய்ய போட்டி போட்டு வந்தனர். மேலும் இந்த படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்த சாய்பல்லவி பிலிம்பேர் விருது பெற்றர். இதைத்தொடர்ந்து  தெலுங்கில் பிடா என்ற திரைப்படத்திலும்..

தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அந்தப் படத்திற்கும் சிறந்த நடிகையாக விருது வாங்கியுள்ளார். இப்படி மலையாள தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாய்பல்லவி ஒருகட்டத்தில் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். அப்படி தமிழில் முதல் படமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து சூர்யாவுடன் என் ஜி கே  போன்ற திரைப்படங்களை கொடுத்தார் பின்பு தெலுங்கிலே முழு கவனம் செலுத்தி பல ஹிட்  படங்களைக் கொடுத்தவர். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் கமலஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள பெயர் வைக்கப்படாத ஒரு புதிய படத்தில் சாய் பல்லவி.

ஹீரோயின்னாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில்தான் வெளியாகியது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

saipallavi-
saipallavi-