பிரேமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பு ஏராளமாக கிடைத்தது. குறிப்பாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் இதுவரை தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தெலுங்கில் இது போல அல்ல தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனக்கான இடத்தையும் நிரந்தரமாக பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விரத பர்வம் திரையரங்கில் வெளியாகி தற்போது சக்கை போடு போட்டு வருகிறது இந்த படத்தில் ராணா டகுபதி ஹீரோவாகவும், ஹீரோயினாக சாய்பல்லவி நடித்து சக்தி உள்ளனர்.
நடிகை சாய் பல்லவி சும்மாவே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி எடுப்பார் இந்த படத்தில் வேற லெவெலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனரான பா ரஞ்சித் அவர்கள் சாய்பல்லவி பாராட்டி தள்ளி ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.
வரத பர்வம் சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு திரைப்படம் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா எந்த சமரசமும் இல்லாமல் படத்தை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள். ஹீரோ ராணா டகுபதி மற்றும் நடிகை சாய்பல்லவி நடிப்பு அபாரம் என புகழ்ந்து தள்ளியுள்ளார். இதோ இயக்குனர் பா ரஞ்சித் போட்ட அந்த அழகிய பதிவை நீங்களே பாருங்கள்.