மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சாய்பல்லவி இந்த திரைப்படத்தில் இவருக்கு மலர் என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவர் கல்லூரி லெக்சரராக நடித்திருப்பார் மேலும் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் இவர் மீது ஆசை கொண்டு வருவதே இந்த திரைப்படத்தின் கதையாகும் இத் திரைப்படமானது இளசுகளின் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு என பல்வேறு ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தது மட்டுமில்லாமல் இன்று பல இளைஞர்களின் மொபைல்போனில் மலரே என்ற பாடல்தான் காலர் டியூனாக இருந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் மூலம் பிரபலமான நமது நடிகை அதன்பிறகு தமிழ் தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வந்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் ஜோடி போட்டு நடித்து விட்டார். இந்நிலையில் நல்ல கதாபாத்திரம் உள்ள திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நமது நடிகை வெற்றியை மட்டுமே சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாய்பல்லவியின் தங்கையும் கூட தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இந்த திரைப்படத்தின் போஸ்டர் கூட வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி உள்ளன.
இந்நிலையில் தனது தங்கைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை சாய் பல்லவி தனது தங்கையுடன் சிறுவயதில் இருந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.