நடிகையுடன் நெருக்கமாக ஜீவி பிரகாஷ்..? பேட்டியில் சைந்தவி என்ன சொன்னார் தெரியுமா…

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தை திறந்தாலே ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து செய்துதான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் 11 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த பிறகு திடீரென விவாகரத்தை அறிவித்துள்ளார்கள் இது சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் நாங்கள் எங்களுடைய எதிர்காலத்தை கருதி இந்த தகவலை வெளியிட்டுள்ளோம் இது குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்கள்.

ஆனால் இப்படி அவர்கள் இருவரும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் பல சமூக வலைதளத்தில் இவர்கள் விவாகரத்திற்கு காரணம் இதுதான் என பல வதந்திகள் பரவி வருகிறது அது குறித்தும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். அதேபோல் இதுபோல் அவதூறாக பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் சைந்தவி கொடுத்த பழைய பேட்டி தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் படத்தில் நடிகைகளுடன் இவ்வளவு நெருக்கமாக நடிக்கிறார் அதை பார்க்கும் பொழுது உங்களின் மனநிலை எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.

அது குறித்து சைந்தவி கூறியதாவது  ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிக்க போறேன் என்ற ச்வுடன் பல கண்டஷன்கள் போட்டேன் ஆனால் அதை எதையும் அவரால் கடைபிடிக்க முடியவில்லை டார்லிங் திரைப்படத்தில் நெருக்கமாக நடித்திருந்தார் எனக்கு அந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் அந்த திரைப்படத்தை பார்த்த பல பேர் சந்தோஷம் அடைந்தார்கள்.

அதேபோல் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது அவர்களுக்கும் மனைவிகள் இருப்பார்கள் அவர்களும் இது போல் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தை வீட்டிலும் பார்ப்பார்கள் அவர்களின் மனைவிக்கும்  இப்படிதான் இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இப்பொழுது எல்லாமே பழகிவிட்டது என அந்த பேட்டியில் சைந்தவி கூறியுள்ளார்.