சினிமாவில் பல நடிகர்,நடிகைகள் தங்களது வாரிசுகள் அல்லது சகோதர, சகோதரிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவர்கள் இருக்கும் பொழுது இவர்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி தந்து விடுவார்கள்.எடுத்துக்காட்டாக அம்பிகா தங்கை ராதா உட்பட இன்னும் ஏராளமான நடிகைகள் அவர்களின் சகோதரியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள்.
இந்நிலையில் தற்பொழுது சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவியின் தங்கை யும் தற்பொழுது நடிகையாக சினிமாவிற்கு களமிறங்கி உள்ளார்.
நடிகை சாய் பல்லவி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பிறகு சூர்யாவுடன் இணைந்து NGK படத்தில் நடித்திருந்தார்.ஆனால் இப்படத்தில் நடித்ததால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அவப்பெயர் தான் கிடைத்தது.
தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று மாறி மாறி பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அழகு சாதன நிறுவனம் விளம்பரத்திற்கு நடிக்க அழைத்துள்ளார்கள். 2 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் பேசி உள்ளார்கள். ஆனால் சாய்பல்லவி இதை முழுமையாக மறுத்துவிட்டாராம்.
இவருடைய தங்கை சாய்பல்லவியை விட நிறம் குறைவாக இருந்ததால் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டாராம். பிறகு சாய்பல்லவியின் தங்கை எப்படியாவது கலர் ஆகிவிட வேண்டும் என்பதற்காக காய்கள்,பழங்கள் சாப்பிட்டு வந்தாராம்.
சாய் பல்லவி அழகு சாதனம் நிறுவனத்தினர்களிடம் இந்த கிரீமை தடவினால் உண்மையாக வெள்ளை அவர்களால் இல்லையா என்று தெரியவில்லை. என் தங்கையை இப்படி இருக்கும் போது நான் எப்படி அந்த பொய்யான விளம்பரத்தில் நடிப்பேன் என்னால் முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம்.
இந்நிலையில் தற்போது சாய்பல்லவியின் தங்கை இயக்குனர் சில்வா மற்றும் நடிகர் சமுத்திரகனி கூட்டணியில் உருவாகி வரும் ஸ்டண்ட் மேன் ஸ்டண்ட் படத்திற்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.