முதன்முதலாக சினிமாவில் என்ட்ரி ஆகும் சாய் பல்லவியின் தங்கை..! இணையத்தை மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

saipallavi-sister
saipallavi-sister

சமீபத்தில் திரையரங்கில் திரைப்படம் வெளியாவதை விட இணையத்தில் திரைப்படம்  அதிக அளவிற்கு வெளியாகி வந்து கொண்டிருக்கிறது அந்த வகையில்  ஒடிடி தளத்தில் நேரடியாக திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று  தருவது மட்டுமில்லாமல் ரசிகர்களும் திரைப்படத்தை வீட்டிலேயே டிஸ்டர்ப் இல்லாமல் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஜீ 5 தளத்தில் ஒரு தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வாறு வெளியாகப்போகும் இத்திரைப்படத்தின் பெயர் சித்திரைச் செவ்வானம். இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா  என்பவர்தான் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி ,ரீமா கல்லிங்கல்  போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது மட்டுமில்லாமல் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் அவர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் முதன் முதலாக என்ட்ரி கொடுக்கிறார்.

இதற்கு முன்பாக இயக்குனர் விஜய் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டும் இல்லாமல் பல்வேறு குறும்படங்களில்  தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் தற்போது உருவாகும் இத்திரைப்படத்தினை இயக்குனர் விஜய் அவர்கள் தான் தயாரிக்க உள்ளாராம்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது டிசம்பர் 3ஆம் தேதி நேரடியாக ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது அந்த வகையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள்மத்தியில் இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.