இந்த முன்னணி நடிகருடன் நடிக்கவே முடியாது ஒரேடியாக ஒதுக்கும் சாய் பல்லவி.! எந்த நடிகர் தெரியுமா.?

saipallavi22

பொதுவாக நடிகைகள்  நடிகர்களை விடவும் ஒரு சில விஷயங்களில் கறாராக இருப்பார்கள். அந்தவகையில் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சிலர் தங்களை விடவும் வயதில் அதிக வித்தியாசம் இருந்தால் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டார்கள்.

அந்த வகையில் தற்போது சாய்பல்லவி 49 வயது மார்க்கெட் இருக்கும் முன்னணி நடிகருடன் நடிக்க முடியாது என்று கூறி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது இவர் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  சாய்பல்லவி டான்ஸராக தான் தனது சினிமா கெரியரை தொடங்கினார்.

எனவே இவர் டான்ஸ் ஆடுவதில் கில்லாடி.அந்தவகையில் இவர் தனது இடுப்பை வளைத்து வளைத்து ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்தார்.எனவே இவர் தனது இன்ஸ்டாகிராமில் போடும் டான்ஸ் வீடியோக்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனாலேயே இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிதளவில் கிடைத்துள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அயப்பனும் கோஷியும் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பழமொழியில் ரீமிக்ஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.

saipallavi-pawankalyan1
saipallavi-pawankalyan1

அந்த வகையில் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நம்ம பேரழகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க பேசியுள்ளார்கள்.

ஆனால் சாய்பல்லவி சில காரணங்களை சொல்லி நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். எனவே பலர் இவர் பகன் கல்யானுக்கு அதிக வயதான காரணத்தினால் தான் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.  தற்பொழுது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.