லோகேஷ் கனகராஜ் அணுகியும் லியோ பட வாய்ப்பை சாய் பல்லவி தவிர்த்ததற்கான காரணம் இதுதான்.! டம்மியான த்ரிஷா..

leo
leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த நிலையில் அதற்கான காரணம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் பல நடிகைகள் விஜயுடன் ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்ற கனவுடன் இருந்து வரும் நிலையில் இவ்வாறு கிடைத்த வாய்ப்பை சாய்பல்லவி வேண்டாம் எனக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சாய் பல்லவி.

இந்த படத்தின் மூலம் மலர் டீச்சராக ஒட்டுமொத்த இலசுகளின் மனதையும் கவர்ந்த சாய் பல்லவி பிறகு அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தமிழில் மாரி 2, என்.ஜி.கே, தியா போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் சொல்லும் அளவிற்கு தமிழில் இவருடைய படம் வெற்றி பெறாத காரணத்தினால் தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.

மேலும் டோலிவுட்டிலும் நடித்து வரும் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை வேண்டாம் என தவிர்த்து வருகிறாராம். அதாவது சாய் பல்லவி இதற்கு மேல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வெயிட்டான கதை இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்ற முடிவில் இருந்து வருகிறாராம் இதனால் தான் பல படங்களின் வாய்ப்பை இழந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சாய்பல்லவியை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் அந்த கதாபாத்திரம் வயிட்டாக இல்லை என்பதற்காக நோ சொல்லி உள்ளார். அதேபோல் விஜயின் லியோ படத்திலும் சாய் பல்லவி நடிக்க மறுத்த நிலையில் அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களிலும் ஹீரோயின்களுக்கு பெரிதளவில் ஸ்கோப் இருக்காது என்பதனால் தான் லியோ படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை தெரிந்துக் கொண்ட ரசிகர்கள் அப்பனா திரிஷா இந்த படத்தில் டம்மி தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.