இயக்குனர்களுக்கு புதிய கண்டிஷன் போட்ட சாய் பல்லவி – வந்தா இந்த மாதிரியான கதாபாத்திரத்தோடு வாங்க இல்லனா வேண்டாம்.? ஒத்த காலில் நிற்கிறாராம்.

saipallavi
saipallavi

சினிமா உலகில் ஒரே நைட்டில்  அதிசயம் நடக்கும் ஆனால் அந்த படத்தின் கதையும் அதில் நடிப்பவர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினால் மட்டுமே நடக்கும். அப்படி மலையாள சினிமாவில் அரங்கேறிய ஒரு படம்தான் பிரேமம். படத்தில் நடித்த பிரபலங்கள் அப்பொழுது புதுமுக நடிகர்கள் தான் ஆனால் அந்த படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்து அசத்தி இருந்தார். அதில் நடித்த இளம் நடிகர் நடிகைகளும் படத்தின் கதைப்படி நடித்து அசத்தினார் அதனால் இந்த திரைப்படம் மலையாளத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த படம் பேமஸ் ஆனது.

மேலும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இந்த படம் மாறியது. இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியும் பிரபலமடைந்தார். இப்பொழுது சாய்பல்லவிக்கு மலையாள சினிமாவையும் தாண்டி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

டாப் நடிகர்கள் படங்களில் நடித்தாலும் இவருக்கு பெருமளவு சிறப்பான கதாபாத்திரம் கிடைக்காத காரணத்தினால் தற்போது புதிய புதிய முடிவுகளை எடுத்து வருகிறார். சினிமா உலகில் வெற்றி அடைய கிளாமர் மற்றும் சின்னதாக பாடலுக்கு நடன மாடினாள் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சாய்பல்லவி தற்போது தன்னை நாடி வரும் இயக்குனர்களுக்கு புதிதாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது படங்களில் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் சும்மா பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிப்பது ஆகியவை இருந்தால் இனி நான் நடிக்க மாட்டேன். என்னுடைய திறமையை காட்டும் படியான கேரக்டர்கள் எனக்கு வேண்டும்.

அதை தான் என்னுடைய ரசிகர்கள் விரும்புகிறார்கள் எனவே இயக்குனர்கள் அப்படி ஒரு கதை இருந்தால் மட்டுமே சொல்லுங்கள் என கேட்டு உள்ளாராம். பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு படம் வந்தாலும் அதில் எனது கேரக்டர் பேசும்படி இருக்க வேண்டும் என கறாராக நிற்கிறாராம் சாய் பல்லவி.