மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இத்திரைப்படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது. அதோடு தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரும் முன்னனி நடிகர்கள் வரை அனைவரும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சாய்பல்லவி எங்களுக்கு ஜோடியாக நடிக்க வையுங்கள் என்று இன்றைய தயாரிப்பாளர்களிடம் கேட்டு வருகிறார்களாம்.
அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் சாய்பல்லவிக்கு அடிமையாகி விட்டார்கள். அதுவும் முக்கியமாக தெலுங்கில் தான் இவரின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தா.ர் இதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே திரைப்படத்திலும் நடித்து இருந்தார் ஆனால் சூர்யாவுடன் இணைந்து நடித்த என் ஜி கே திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியை பெற்றுத் தந்தது.
இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில்தான் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார் என்று கூறப்பட்டது. அந்தவகையில் ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்தவுடன் சாய்பல்லவி விட அவரின் தங்கை அழகாக இல்லை என்று கூறி வந்தார்கள்.
இவ்வாறு கூறி வந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பூஜா கண்ணன் தனது ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை தனக்கென உருவாக்கிவிட்டார். எனவே இவ்வாறு பிரபலமடைந்து வரும் இவரின் வளர்ச்சியை பார்த்தால் சாய்பல்லவியின் மார்க்கெட் அவ்வளவுதான் போல.எனவே ரசிகர்கள் சொந்த தங்கையே சாய்பல்லவி ஆப்பு வைத்துவிடுவார் போல என கூறி வருகிறார்கள்.