மலையாள திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் இன்று ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் இவர் நடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் சாய்பல்லவி யை அனைவரும் மலர் டீச்சர் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
நடிகை சாய் பல்லவி நடிப்பில் மட்டும் சிறந்தவர் கிடையாது நடனத்திலும் சிறந்தவர் அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சாய்பல்லவி இரண்டாவது பரிசை தட்டிச்சென்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்த வகையில் முதல் பரிசை தட்டிச் சென்றவர் தன்னை விட அழகிலும் சரி திறமையிலும் சரி குறைந்தவர் தான் ஆனால் இவர் எப்படி முதலிடத்தை பெற்றார் என மிகுந்த வருத்தத்துடன் சாய்பல்லவி இருந்தார். அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தவர் தான் பிரபுதேவா.
சமீபத்தில் ரவுடி பேபி பாடல்லில் கூட கொடியோகிராபியாக பணியாற்றி இருப்பார் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமில்லாமல் சாய்பல்லவி யின் நடனம் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி மூலமாக ரசிகர்களிடம் வரவேற்ப்பு மிகுந்துள்ளது.
பொதுவாக சாய்பல்லவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் பரிசு வென்று இருந்தால் கூட பல லட்சம் மதிப்புள்ள பணத்தை மட்டும் தான் சம்பாதித்து இருப்பார் ஆனால் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தனக்கு நடுவராக வந்த நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.