நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிரபல நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர். சினிமாவில் உள்ள ஆர்வத்தால் படித்த படிப்பையும் பொருட்படுத்தாமல் தற்பொழுது நடித்து வருகிறார்.
இவர் முதன்முதலாக அல்போன் புத்திரன் இயக்கத்தில் வெளியாகிய பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சர் ஆக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதன் பிறகு இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழில் என் ஜி கே, மாரி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
அதிலும் மாரி 2 திரைப்படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. பொதுவாக ஹீரோயின் என்றாலே மேக்கப் அதிகமாக போட்டு அப்படி தான் நடித்து வருவார்கள். ஆனால் நடிகை சாய் பல்லவி பெரிதாக எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் நேச்சுரலாக வலம் வருவதுதான் இவரின் தனித்தன்மையான அழகு.
சமீபகாலமாக சாய் பல்லவி கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வருகிறார். பார்ப்பதற்கு அழகாக ஜொலிக்கும் சாய் பல்லவி கிளாமர் ரூட்டுக்கு தடை போட்டு விட்டார் முத்த காட்சி, படுக்கை அறை காட்சி என எதிலும் நடிக்க மாட்டார் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஏதாவது ஒரு நடிகை நடிதால் சில தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள் ஆனால் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்றால் தயாரிப்பாளர்கள் ஒரே குஷி ஆகிவிடுகிறார்கள் ஏனென்றால் தன்னால் தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் நஷ்டம் வரக்கூடாது என எண்ணி கால்ஷீட் கொடுப்பார். அதேபோல் கால்ஷீட் கொடுத்த நாள் அன்று குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து மேக்கப் செய்து கொண்டு பக்காவாக நடிப்பதற்கு ரெடி ஆகிவிடுவார்.
இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் சாய்பல்லவியை புக் செய்ய அவரை நோக்கி படையெடுக்கிறார்கள்.