தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 2010 ஆம் ஆண்டு “பானா காத்தாடி” என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் நல்ல கதைகளில் நடிப்பதால் அவருடைய வெற்றி சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படி தென்னிந்திய முழுவதும் வெற்றிகளை கண்டு வந்த இவர் நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தது அதன் பிறகு சினிமா தான் எல்லாம் என கருதிக் கொண்ட சமந்தா தொடர்ந்து படங்களில் கிளாமர் டான்ஸ் மற்றும் சோலோ கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.
அண்மையில் கூட நடிகை சமந்தா நடித்த யசோதா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதில் முதலாவதாக சாகுந்தலம் திரைப்படம் வருகின்ற 14 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தை தில் ராஜி தயாரிக்க.. குணசேகர் இயக்கிய உள்ளார் படம் நிச்சயம் வெற்றி பெறும் என படக்குழு நம்பி உள்ளது இந்த நிலையில் சாகுந்தலம் திரைப்படம் வெளிவர நான்கு நாட்களில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரிமியர் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. யசோதா திரைப்படத்திற்கு பிறகு சமந்தா இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார் ஆனால் முதல் விமர்சனமே இப்படி இப்படி வருகிறது. படம் ரிலீசாகும் போது இதற்கான ரிசல்ட் மாறுமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..