முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்காக குறைந்த சாகுந்தலம் படத்தின் 2வது நாள் கலெக்ஷன்.! அதிர்ச்சியில் படக் குழு..

shakunthalam
shakunthalam

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தொடந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் குணசேகரன் இயக்கத்தில் கதையின் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் சாகுந்தலம். இந்த திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த நிலவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது சில மாதங்களாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா தற்பொழுது அதிலிருந்து மீண்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு காத்து வாக்குல இரண்டு காதல், யசோதா போன்ற இரண்டு திரைப்படங்களும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் நல்ல வெற்றியை பெற்றிருந்தது.

இதனை அடுத்து அவர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தான் சாகுந்தலம் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல மாதங்களாக தள்ளிப்போட்டு வந்த நிலையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசானது. இந்த படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்திய படமாக ரிலீஸ் ஆனது.

புராணக் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்த சாகுந்தலம் படத்தை குணசேகரன் இயக்க நீலிமா குணா பல கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்த நிலையில் தில்ராஜ் இப்படத்தை வெளியிட்டார். மேலும் இந்த படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார். இவரை தொடர்ந்து அதிதி பாலன், அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் மணி ஷர்மா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இவ்வாறு இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்பு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார் சமந்தா. ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் இந்த படத்திற்காக காத்து வந்த நிலையில் ரிலீஸ்சாகி கலவை விமர்சனத்தை பெற்றது. மேலும் இந்த படம் வசூலில் செம அடி வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியான முதல் நாளில் ரூபாய் 5 கோடி வசூல் செய்த நிலையில் இதனை அடுத்து இரண்டாம் நாள் வசூலில் வெறும் ரூபாய் 1.5 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.