படத்தின் கதைக்காக அப்படி ஒரு அருவருப்பான சீனில் நடித்தேன்.! மனம் திறந்த நடிகை சதா

Sadha

Actress Sadha : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் சதா. இவர் முதலில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவான ஜெயம் படத்தில் ஹீரோயின்னாக நடித்து என்ட்ரி கொடுத்தார். படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி..

உன்னாலே உன்னாலே, எலி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிய சதா மிகப்பெரிய ஒரு நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வடிவேலுவின் எலி திரைப்படத்திற்கு பிறகு நடிகை சதவுக்கு   தமிழ் சினிமாவில் வீழ்ச்சி ஆரம்பித்தது. எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் சமூக வலைதள பக்கங்களில் மற்ற நடிகைகள் போல இருவரும் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோவை எல்லாம் வெளியிட்டு பார்த்தார் ஆனால் வாய்ப்பு மட்டும் எட்டிப் பார்க்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதனால் தமிழை தாண்டி பிற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கசப்பான விஷயம் குறித்து பேசி உள்ளார். நான் தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன் அந்த படத்தின் காட்சி ஒன்றில் கன்னத்தில் வில்லனான கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.

Sadha
Sadha

இது போன்ற அருவருப்பான காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என இயக்குனரிடம் கூறினேன் ஆனால் படத்தின் கதைக்கு அது மிகவும் தேவை என கூறி படமாக்கி விட்டார் அந்த காட்சி நடித்து முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தேம்பி தேம்பி அழுதேன். இன்று வரை அந்த படத்தில் ஏன் நடித்தேனோ.?என வருத்தப்பட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார்.