தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்தின் மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில்..
விறுவிறுப்பாக படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் மேலும் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா போன்றவர்களும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இதனால் லியோ படதிற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு பேசி உள்ளார்..
அவர் சொன்னது என்னவென்றால்.. பலபேர் சச்சின் திரைப்படம் தோல்வி படம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அது மிகப்பெரிய ஒரு வெற்றி படம் தான்.. தளபதி விஜயின் சச்சின் திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது ஆனால் இந்த படத்தைப் பற்றிய அப்பொழுது பெரிய அளவில் பேசக்கூடாதத்திற்கு காரணம்..
இந்த படத்தை விட சந்திரமுகி படம் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றதால் இந்த படத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியே தெரியாமல் போனது என பதிலளித்துள்ளார். விஷயத்தை கேள்வி பட்ட தளபதி ரசிகர்கள் இதை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்தில் பெரிய அளவில் பரப்பும் வருகின்றனர்.