இந்திய கிரிக்கெட் வீரரில் சச்சின் டெண்டுல்கரை தெரியாதவரே கிடையாது அந்த வகையில் சிறு குழந்தைகளைக் கூட கேட்டாள் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் என்று கூறுவார்கள். இவ்வாறு பிரபலமான நமது கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடத்தில் கூட ஒரு பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புகழ்மிக்க நமது கிரிக்கெட் வீரர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி புகழ்ந்து தள்ளிய ட்வீட் ஆனது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய திரை பணியை தொடர்ந்து இதுவரை 45 ஆண்டு காலம் ஆன வகையில் அதனை பாராட்டும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை தோன்றக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால் அதை ரஜினிகாந்த் ஒவ்வொருமுறையும் செய்து வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக பல்வேறு பார்வையாளர்களை கவர்ந்து வருவது மட்டுமல்லாமல் தற்பொழுது இப்படிப்பட்ட விருதுகளை வாங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அதே போல தான் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் இப்படிப் புகழ்பெற்ற நமது கிரிக்கெட் வீரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்ததன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் தான் அவருடைய மருமகன் தனுஷ் அவர்கள் தேசிய விருது வாங்கியுள்ளார் இவ்வாறு மருமகனும் மாமனாரும் ஒரே மேடையில் விருது பெற்றதை ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.