தார தப்பட்டை கிழிய கிழிய சாணி காகிதம் திரைப் படத்திற்கு இசையமைக்கப் போகும் இசையமைப்பாளர் யார் தெரியுமா..?

saani-kaakitham

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அந்த வகையில் தற்போது தன்னுடைய தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்சமயம் திரைப்படம் இயக்குவது மட்டுமின்றி திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து காகிதம் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து வரும் வகையில் இந்த திரைப்படத்தில் இசை அமைக்க போவது யார் என்ற செய்தி ரசிகர்களுக்கு கேள்விக்குறியாக இருந்து வந்தன இந்நிலையில் அதற்கான விடை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

sani kaagitham-2
sani kaagitham-2

இந்நிலையில் சாணி காகிதம் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் என்ற இசையமைப்பாளர் தான் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் மிக குறுகிய காலத்தில் பின்னணி இசை வேலையை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நமது இசை அமைப்பாளர் சாணி காகிதம் படத்தில் இணைவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பது மட்டுமல்லாமல் இதனை வைரலாக்கி வருகிறார்கள்

sani kaagitham-1