5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாமி திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? மிரள வைக்கும் தகவல்.!

saamy
saamy

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதை களத்தை உடையது, அதேபோல் விக்ரம் தான் நடிக்கும் படத்திற்காக உடலை வருத்தி எடுக்கக் கூடியவர்.

இப்படி விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியேறிய திரைப்படம் சாமி, இந்த திரைப்படத்தை ஹரிதான் இயக்கியிருந்தார் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷாவும் மற்றும் விவேக் என பலர் நடித்திருந்தார்கள், அதேபோல் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார்..

இந்த திரைப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தான் உருவானது ஆனால் இதன் மொத்த வசூல் 28 கோடி ஆகும், இதில் 24 கோடி இந்தியாவில் மட்டும் வசூலாகியுள்ளது ஓவர்சீஸ் நாடுகளில் மொத்தம் நாலு கோடி ரூபாய் வசூலை ஈட்டியது இந்த சாமி திரைப்படம்.

அதனால் இந்த சாமி திரைப்படம் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என அனைவருக்கும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது சாமி திரைப்படத்தை இரண்டாவது பாகமாக இயக்கினார்கள், ஆனால் சாமி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற முடியவில்லை.