தமிழ் சினிமாவுலகில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அப்படி கிடையாது தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் உதவியை பெற்று படிப்படியாக முன்னேறினார் விஜய் சொல்லப்போனால் ஆரம்பத்தில் தொடர்ந்து 10 படங்கள் கலவையான வரவேற்பையே பெற்றதது.
அதன் பிறகுதான் நல்ல கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிக்கனியை பெற ஆரம்பித்தார். அப்படி சினிமா ஆரம்பத்தில் பல பிரச்சனைகளையும் தளபதி விஜய் சந்தித்து உள்ளார் அந்த வகையில் சந்திரசேகர் அதாவது விஜயின் அப்பாவிடம் விஜய் திட்டு வாங்கிய ஒரு சம்பவம் நடந்து உள்ளது.
அதை பற்றி தான் நாம் இப்பொழுது விலாவாரியாக பார்க்கப் போகிறோம். தளபதி விஜய் நடிகை சங்கீதா உடன் கை கொடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள் தான் அந்த வகையில் விஜயும் சங்கீதாவும் இணைந்து ரசிகன் என்ற படத்தில் நடித்தனர்.
இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் ஒரு காட்சிக்காக குளிரான தண்ணியில் இறங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். உடனே நடிகை சங்கீதா அதற்கேற்ற மாதிரி உடையைப் போட்டுக் கொண்டு தண்ணீரில் இறங்கி விட்டார் ஆனால் விஜய்யோ தண்ணி ரொம்ப குளுருது என இயக்குனரிடம் கூறி இறங்க மறுத்து விட்டாராம்.
பக்கத்தில் நின்ற அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் ஏன் தண்ணீரில் இறங்க வில்லை என கேட்டதற்கு தண்ணி ரொம்ப ஜில்லுனு இருக்கு என கூறியுள்ளார். அந்த பெண்னே இறங்கிடுச்சு உனக்கு என்ன என கூறி சந்திரசேகர் திட்டினாராம். விஜயின் அப்பா போன பிறகு நடிகை சங்கீதாவை கூப்பிட்டு விஜய் உன்னை யாரு முதலில் இறங்க சொன்னது என கேட்டு கோபித்துக் கொண்டாராம்.