நடிகர் அஜித் பற்றி விஜய்யின் அப்பாவும், தயாரிப்பாளருமான எஸ்ஏ சந்திரசேகர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தற்பொழுது பிரபல நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். தனக்கான ஸ்டைலில் நடிப்பு போன்றவற்றால் பல்லாயிரம் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் இதனை அடுத்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே விக்னேஷ் சிவனும் அஜித்திற்கு ஏற்றார் போல் கதையை தயார் செய்திருந்த நிலையில் பிறகு லைக்கா நிறுவனம் அஜித்திடம் இந்த கதையைக் கூற பிறகு இவர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக பல ரசிகர்கள் விக்னேஷ் சிவன் அவர்களின் கெரியரை அஜித் அவர்கள் நாசம் செய்து விட்டதாகவும், அவருடைய கனவை உடைத்து விட்டதாகவும் கூறி வருகின்றனர்.
ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவலும் வெளியான நிலையில் இவ்வாறு திடீரென அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது.
அதற்காக, அஜித் உடைய வாழ்க்கையை கெடுக்கிறவங்க இருக்கிறாங்க நிச்சயமா இருக்காங்க, அந்த படத்துல நயன்தாராவுக்கு முக்கிய துவம் இருந்ததனாலும், கதை சொல்லும் அளவிற்கு இல்லை என்பதனாலா என எந்த காரணமும் சரியாக தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அனைவருக்கும் தெரியும் அதாவது அஜித் ஒத்துக்கிட்டார்னா அத பர்ஃபெக்ட்டா செய்வாரு.. இதனால் யாரும் கெட மாட்டாங்க அவர் யாரையும் கெடுத்ததாக சரித்திரமே கிடையாது என கூறியுள்ளார்.